
கோவை,உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் கடந்த 2ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை அகில பாரதிய சந்த் சமிதி ,அகில பாரதிய அகண்ட பரிஷத் மற்றும் ஸ்ரீ காசி வித்வாத் பரிஷத் இணைந்து நடத்திய சன்ஸ்கிருதி சன்ஷத் 2023கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சன்ஸ்கிருதி சன் ஷத் 2023 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மகா ருத்ராபிஷேகம் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர். அதில் 10 சிவனடியார்கள் வாரணாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை கென்னடி தியேட்டர் உரிமையாளரும் , பாரதிய ஜனதா தெற்கு மாவட்ட ஆன்மீக மற்றும் கோயில்கள் அணியின் மேற்பார்வையாளர் மணிகண்டன் தேவையான ஏற்பாடுகளை செய்து அனுப்பி வைத்திருந்தார். வாரணாசியில் சனாதன தர்மம், இந்து தர்மம் குறித்த கருத்தரங்குகள் நடைபெற்றன . தொடர்ந்து நடைபெற்ற ருத்ராபிஷேகத்தில் சிவனடியார்கள் பங்கேற்று மீண்டும் தமிழகம் திரும்பினர் . அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.இதை தொடர்ந்து பாரதிய ஜனதா தெற்கு மாவட்ட ஆன்மீக மற்றும் கோயில்கள் அணியின் மேற்பார்வையாளர் மணிகண்டனுக்கும் அவரது குடும்பத்தாருக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அகில பாரதிய சந்த் சமிதியின் தமிழக செயல் தலைவர் சுவாமி மகா ஸ்ரீ ஸ்ரீ யுத்தேஸ்வர் ,நிர்மலா மாதாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.