கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள விப்ஜியார் பள்ளியில் படித்து வரும் மாணவர் கிரினித். இவருக்கு சொந்த ஊர் உதகை அடுத்த ,நஞ்சநாடு,கப்பத்தொரை ஆகும் . பி.கிரினித்(வயது 10) தாயார் பவித்ரா.கிரினித் தற்போது அசாத்திய திறமையுடைய சாதனையாளராக மாறியுள்ளார்.
உலகிலுள்ள அனைத்து நாடுகளின் தேசியக் கொடிகளைக் காட்டினால்,அந்த நாட்டின் பெயரைக் கூறுவதோடு,அந்த நாட்டின் சிறப்பம்சங்களை விரிவாக தெரிவிக்கும் அசாத்திய திறமை மற்றும் உலக நாடுகளின் வரைபடத்தை வைத்து அனைத்து,உலகநாடுகளை துல்லியமாக காட்டுவதிலும் திறன் படைத்தவராக இருக்கிறார்.
நெப்போலியன்,அலெக்ஸாண்டர்,ஹென்றி-V போன்ற அரசர்கள் மாவீரர்களின் வரலாற்றை மிகத்துல்லியமாகவும் கூறுகிறார்.அத்துடன் எந்தெந்த நாடுகள்மீது அவர்கள் படையெடுத்தார்கள், எப்படி வெற்றிகண்டார்கள் என்று மிகத்துல்லியமாக விளக்கும் அசாத்திய திறன் படைத்தவர்களும் திகழ்கிறார்.
இவர்தம் திறமைகளை அங்கீகரிக்கும் விதமாக 4 உலகளாவிய அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கியுள்ளது.
1.The Child Prodigy Award- 27th August 2022
2.Global Kids Achievers Award- 3rd December 2022.
3.Super Talented Kid Award-27th December 2022.
4.Record Holder- India Book of Records- 18 th January 2023.

இவர்கள்தம் திறமைகள் மற்றும் விருதுகளுக்காக,நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் ,கிரினித்தை வாழ்த்தி ஆசி வழங்கி பாராட்டினார்.
கிரினித்துடன் அவர்தம் தாயார் பவித்ரா மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி முதல்வர் ரங்கநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.