மலையாளத்தில் இருந்து தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் ரீமேக் செய்யும் படங்கள் வெற்றி பெறுவது,திரைப்பட துறைக்கு ஆரோக்கியமே என பிரபல நடிகையும்,பின்னனி பாடகியும் ஆன ரம்யா நம்பீசன் கோவையில் தெரிவித்துள்ளார்..
கோவை கணுவாய் பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பிரபல நடிகையும்,பின்னனி பாடகியுமான ரம்யா நம்பீசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,திரைப்பட பின்னனி பாடகி வாணி ஜெயராம் நம்மை விட்டு பிரிந்த்து,மீளாத்துயரம் என வேதனை தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர்,தாம் தற்போது,
ஒ.டி.டி.தள வெப் தொடர்களில் நடித்து வருவதாகவும்,வெப் தொடர்கள் தற்போது வரவேற்பை பெற்று வருவதாகவும்,வளர்ந்து வரும் நடிகர்,நடிகைகள் உள்ளிட்ட அனைவருக்கும் வெப் தொடர்கள் நல்ல வாய்ப்பாக இருப்பதாக தெரிவித்தார்..ரீமேக் படங்கள் குறித்த கேள்விக்கு, மலையாளத்தில் இருந்து தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் ரீமேக் செய்யும் படங்கள் வெற்றி பெறுவது,திரைப்பட துறைக்கு ஆரோக்கியமே எனவும் அவர் தெரிவித்தார்.