
கோவை,
சேலத்தில் வரும் அக்டோபர் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் மாநில அளவிலான சப் ஜூனியருக்கான சாப்ட் டென்னிஸ் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கோயம்புத்தூர் மாவட்ட அணியின் சார்பில் கலந்து கொள்ள கோயம்புத்தூர் மாவட்ட அணியின் தேர்வு போட்டியானது, சிங்காநல்லூர் வெள்ளலூர் ரோட்டில் அமைந்துள்ள டாப் ஸ்பின் டென்னிஸ் சென்டரில் நடைபெற்றது.
இந்த தேர்வு போட்டியில் வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள் அணியில் அபிநவ் சண்முகசுந்தரம், சித்தரஞ்சன் ,நிகில் அபிமன்யு, நித்திஷ் ,ஜெய்பிரணவ், பிரனேஷ் ராம் ,ஸ்ரீ ஈஸ்வர் ,ஜோர்டன் ஆகியோரும் , மாணவிகள் பிரிவில் நித்யஸ்ரீ பாலா, லக்ஷிதா, லக்ஷனா பாலச்சந்திரன் ஆகியோரும் தகுதிபெற்று உள்ளனர்.
இந்த தகவலை அமைச்சூர் கோயம்புத்தூர் சாப்ட் டென்னிஸ் சங்கத்தின் பொது செயலாளர் ஜான் கேரினோ தெரிவித்தார்.