அகம் நுகர்வோர் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 

கோவை,

அகம் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் சார்பில்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோவை  காந்திபார்க்கில் உள்ள செயல் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை  சங்கத்தின் தலைவர் திருக்குமார் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வீதியோரம் வசிக்கின்ற ஆதரவற்றவர்கள், முதியவர்கள் 50 நபர்களுக்கு புத்தாடை மற்றும் நல உதவி பொருட்கள்  வழங்கப்பட்டது. சங்கத்தின் பொருளாளர் மணிகண்டன், துணைச் செயலாளர் காளிமுத்து, ஒருங்கிணைப்பாளர் வெள்ளிங்கிரி, ஆலோசகர் மரு. சிவசக்திவேல் , மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் மோகன், விஜயகுமார், சுரேஷ்பாபு, அருணகிரி, ராமநாதன், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு இத்தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் விபத்து மற்றும் காற்று மாசு படாமல்  பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகள் இல்லா கோவையை உருவாக்குவோம் என தீபாவளி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.