தமாகா சார்பில் தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா

கோவை,

தமிழ் மாநில காங்கிரஸ் கோவை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பில் கணபதி பகுதியில் துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மாநகர் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் திருமலை எம்.ரவி ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவிற்கு  சிறப்பு விருந்தினராக மாநில மாணவரணி துணை தலைவர்  அஸ்வின் சந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.தொடர்ந்து நடைபெற்ற விழாவில் துப்புரவு பணியாளர்கள் 75   பெண்களுக்கு சேலைகளும், 25 ஆண்களுக்கு வேஷ்டி சட்டை மற்றும் கோவை மாநகர் வடக்கு மாவட்ட சர்க்கிள் தலைவர்கள், கணபதி வார்டு தலைவர்கள் அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில்  சார்லஸ், ரகு, மாநகர் வடக்கு மாவட்ட துணைத் தலைவர்கள்  குனிசை ரவிச்சந்திரன், ரஃபி, மாவட்ட பொதுச் செயலாளர் சங்கனூர் ஜெயச்சந்திரன், கணபதி சர்க்கிள் தலைவர் முருகானந்தம், கவுண்டம்பாளையம் சர்க்கிள் தலைவர் சிவராஜ் ,சரவணம்பட்டி சர்க்கிள் தலைவர் வர்கீஸ் பிரபு, ஆர் எஸ் புரம் சர்க்கிள் தலைவர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் மோர் மார்க்கெட் சுந்தரம், சின்னச்சாமி ,தனசேகரன், மாரிமுத்து, அறிவானந்த பாண்டியன்,கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.