
கோவை,
கோவை கிராமத்து பால் நிறுவனர் டாக்டர் கே. ஜனார்த்தனனுக்கு ராஜராஜ சோழன் விருது வழங்கப்பட்டது.
கோவை கணபதி எப்.சி.ஐ.சாலையில் உள்ள கிராமத்து பால் நிறுவனம் செய்து வரும் பல்வேறு மக்கள் சேவைகளை பாராட்டி தமிழக முதல்வர் ,அமைச்சர்கள் ,பல அமைப்புகள் தொடர்ந்து விருதுகள் வழங்கி வருகின்றனர்.இதுவரை ஏழை எளியோர்க்கும், குழந்தைகளுக்கும், கர்பிணி பெண்களுக்கும் சுமார் 3 லட்சம் லிட்டர் மாட்டுப் பாலை இலவசமாக வழங்கி உள்ளனர்.இந்த நிறுவனத்தின் சேவையை பாராட்டி கிராமத்து பால் நிறுவனரும், தென்னிந்திய இரயில்வே வாரிய உறுப்பினர் டாக்டர் கே. ஜனார்த்தனுக்கு ருத்ராட்சா பவுண்டேஷன் சார்பில் சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்ற விழாவில் ராஜராஜ சோழன் விருது விருது வழங்கப்பட்டது.