மருத்துவ தரவரிசை பட்டியலில் கோவை மாணவி இரண்டாமிடம்

கோவை :
மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் கோவை மாணவி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, செப்., 22 முதல் இம்மாதம், 6ம் தேதி வரை விண்ணப்பப்பதிவு நடந்தது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 22 ஆயிரத்து, 643, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 13 ஆயிரத்து, 457 என, 36 ஆயிரத்து, 100 பேர் விண்ணப்பித்தனர்.
இதையடுத்து, எம்.பி.பி.எஸ்., -பி.டி.எஸ்., படிப்புகளுக்கு அரசு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் அரசின், 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், கோவையை சேர்ந்த சுகுணா பிப் பள்ளி மாணவி ஹரிணி அரசு ஒதுக்கீட்டில், மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
மாணவி ஹரிணி கூறுகையில்,”கஷ்டப்பட்டு உழைத்ததற்கு கிடைத்த வெற்றி. மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரியில் சேர திட்டமிட்டுள்ளேன்,” என்றார்.