கோவை,
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தேசிய பேரிடர் குறைப்பு தினம் சிறப்பு செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் அக்டோபர் 13 ஆம் தேதி தேசிய பேரிடர் குறைப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை கணபதி தீயணைப்பு நிலையம் சார்பில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் தேசிய பேரிடர் குறைப்பு சிறப்பு செயல்முறை விளக்கம் மற்றும் ஒத்திகை நடைபெற்றது. கணபதி தீயணைப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையில் முன்னணி தீயணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் சதீஷ்குமார், ராஜீவ் காந்தி ,சபரி ராஜன், ரவிக்குமார், தமிழ்வாணன் உட்பட குழுவினர் கலந்து கொண்டு செயல்முறை விளக்கம் அளித்தனர். அதில் பேரிடர் காலங்களில் மக்களின் உயிரை காப்பாற்றுவதோடு தங்களையும் காப்பாற்றிக் கொள்வது என்பது எப்படி என விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் அதற்குரிய செயல்முறை விளக்கங்களையும் தீனைப்பு வீரர்கள் செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சியில் டாக்டர் முத்தூஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி
மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எம்.முத்து சரவணகுமார், நிர்வாக இயக்குனர் டாக்டர் ஏ.எஸ்.பிரேமா , இணை நிர்வாக இயக்குனர் எம். செல்வகுமார் ,டாக்டர் பாரதி மோகன் , மருத்துவமனை டாக்டர்கள் , நர்ஸ்கள் ,பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
%d bloggers like this: