கோவை அருகே பஸ் விபத்து:9 பேர் சாவு

கோவை,

கேரளாவில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த பஸ் ஒன்று, அரசு பஸ்சின் பின்பக்கத்தில் மோதியது. இந்த விபத்தில் மாணவர் கள் உள்பட 9 பேர் பலியா னார்கள். மேலும் 40 பேர் காயம் அடைந்தனர்.கேரள மாநிலம், எர்ணா குளத்தில் மூலந்துருத்தி என்ற பகுதியில் பசலியஸ் என்ற பெயரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி யில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் பயின்று வரும் மாணவ மாணவி களை ஊட்டிக்கு சுற்றுலா வாக அழைத்துச் செல்ல பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி 26 மாணவர் கள், 16 மாணவிகள், 5 ஆசிரியர்கள், 2 ஊழியர் கள் உள்பட 51 பேர் அந்த பஸ்சில் புறப்பட்டு வந்த னர். அதே நேரத்தில் கேரள மாநிலம், கொட்டாரகரை யில் இருந்து கோயம்புத்தூருக்கு அந்த மாநில அரசு பஸ் ஒன்று புறப்பட்டு வந் தது. அந்த பஸ்சில் 49 பேர் பயணித்தனர். இந்த பஸ் பாலக்காடு அருகே உள்ள வடக்கன்சேரி என்ற இடத்தில் வந்து கொண்டிருந் தது. அப்போது பள்ளிக் கூட சுற்றுலா பஸ்சும் பின்னால் வந்தது. அந்த சுற்றுலா பஸ், அதிவேகத்தில் வந்து அரசு பஸ்சை முந்த முயன்றது. ஆனால் எதிர்பாராத விதமாக அரசு பஸ்சின் பின்பக்கத்தில் பயங்கரமாகமோதி கவிழ்ந்தது. இந்தவிபத்தில் 2 பஸ்களுமே கடுமையாக சேதம்அடைந்தன. விபத்து நள்ளிரவு 12 மணி யளவில் நடந்தது. தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டார்கள்.இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலே மாணவ -மாணவிகள் பயணிகள் உட்பட 9 பேர் பலியானார்கள். அந்த 9 பேரில் அரசு பஸ் சில் வந்த 3 பயணிகளும் அடங்குவர். மேலும் 40 பேர் காயம் அடைந்தார் கள். அவர்களில் 12 பேரின் நிலைமை மோசமாக உள் ளது. காயம் அடைந்தவர் கள் அனைவரும் பாலக் காட்டில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல் லப்பட்டுள்ளார்கள். உயி ரிழந்தவர்களின் உடல்க ளும் பிரேத சோதனை க்காக பாலக்காடு மற்றும் ஆலத்தூர் மருத்துவமனை களுக்கு கொண்டு செல் லப்பட்டுள்ளன.