தேசிய பளுதூக்கும் போட்டியில் கோவை மாணவன் இரண்டாமிடம் பெற்று சாதனை

கோவை,தேசிய அளவிலான பலூக்கும் போட்டியில் கோவை பி. ஆர். சித்தா நாயுடு நினைவு மெட்ரிக் பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் ஸ்ரீ ஹரிராம் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.கோவை கணபதி பகுதி சேர்ந்த ஆவின் பால் முகவரான சரவணன் விசாலாட்சியின் மகன் ஸ்ரீ ஹரிராம். இவர் சித்தாபுதூர் பகுதியில் உள்ள பி. ஆர் .சித்தா நாயுடு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.கடந்த வாரம் டெல்லியில் நேஷனல் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் மற்றும் என்ஐடிஐ சார்பில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட ஸ்ரீ ஹரிராம் தேசிய அளவில் 83 கிலோ எடை பிரிவில் 193 கிலோ எடை தூக்கி இரண்டாம் இடம் பெற்றார். இது குறித்து மாணவர் ஸ்ரீ ஹரிராம் கூறும்போது கடந்த 4 ஆண்டுகளாக எக்ஸ்ட்ரீம் ஜிம்மில் கடுமையாக பயிற்சி செய்து வந்தேன். பயிற்சியாளர் பிரபாகரன் எனக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்ததன் காரணமாக இன்று தேசிய அளவில் பதக்கத்தை பெற முடிந்தது என்றார்.போட்டியில் வெற்றி பெற்று கோவைக்கு திரும்பிய மாணவன் ஸ்ரீ ஹரிராமுக்கு பள்ளியின் தாளாளர் சாந்தா, பள்ளி முதல்வர் காஞ்சனா ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர் .