
கோவை,
கோவையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 84 ஊராட்சி செயலா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.
அரசு அலுவலா்கள் பல்வேறு காரணங்களால் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் ஒரே ஊராட்சி, வட்டாரத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி செயலா்கள் பணியாற்றி வருவதாகவும், பணியிட மாற்றம் செய்யக் கோரியும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஊராட்சி, வட்டாரத்தில் பணியாற்றி வரும் 84 ஊராட்சி செயலா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஊராட்சி செயலா்கள் அனைவரும் உடனடியாக புதிய ஊராட்சியில் பணியில் சேரவும் உத்தரவிட்டுள்ளாா்.
மேலும் பணி மாறுதல் தொடா்பான கோரிக்கைகள் ஏதும் ஏற்கபடாது என்றும், பணி மாறுதலைத் தவிா்க்கும் பொருட்டு விடுப்பில் செல்பவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளாா்.