கோவையில் நாளை மறுநாள் சைக்ளத்தான்

கோவை,
கோவை மாநகராட்சி சாா்பில் சைக்கிள் பயன்பாடு குறித்த விழிப்புணா்வு ‘சைக்ளத்தான்’ நாளை மறுநாள் 18 ஆம் தேதி நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அதிகரித்து வரும் வாகனங்களால் புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாகவும், சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்கவும் சைக்ளத்தான் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
உக்கடம் பெரியகுளத்தில் துவங்கி செல்வபுரம் சாலை, குமாரசாமி குளம், டி.பி.சாலை, புரூக் பாண்ட் சாலை, டி.வி.சாமி சாலை, ரேஸ்கோா்ஸ், நிா்மலா கல்லூரி வழியாக வாலாங்குளம் பாலத்துக்குகீழ் சைக்ளத்தான் நிறைவடையும். 20 கிலோ மீட்டா் வரை உள்ள இந்தப் பயணம் காலை 6 மணிக்கு தொடங்கும். 10 வயதுக்கு மேற்பட்டவா்கள் இதில் கலந்துகொள்ளலாம்.
பதிவு செய்வோருக்கு சான்றிதழ் மற்றும் டி- ஷா்ட் வழங்கப்படும். மேலும், உக்கடம் பெரியகுளத்தில் வெஸ்டா்ன் வேல்லி சைக்கிள் கிளப் சாா்பில் குழந்தைகளுக்கு நீச்சலின் அவசியம் குறித்தும், நீரில் தவறி விழுவோரை காப்பாற்றுவது மற்றும் முதலுதவி அளிப்பது தொடா்பாகவும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 95666-60859, 98947-89893 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.