பாஜக கோவை வடக்கு மாவட்ட தொழில் பிரிவு நிர்வாகிகள் கூட்டம்

கோவை,பாஜக கோவை வடக்கு மாவட்ட தொழில் பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சத்தி மெயின் ரோடு கரியாம்பாளையம் பிரிவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தொழில் பிரிவு மாவட்ட தலைவர் திரு கே.கே.ரவி  தலைமையில் நடைபெற்ற  இந்தக் கூட்டத்தில், மாநிலத் துணைத் தலைவர் சுப .செல்வராஜ்,  கோவை தொழில் பிரிவு பெருங்கோட்ட பொறுப்பாளர்  ரவிக்குமார் ,மாநில செயலாளர்  பிரேம் ஆனந்த், கோவை வடக்கு மாவட்ட செயலாளர்  ஜெயபால் அன்னூர் தெற்கு ஒன்றிய தலைவர்  ரத்தினசாமி ஆகியோர் வாழ்த்துரையும் சிறப்புரையும் வழங்கினார்கள். மேலும் தொழில் பிரிவு மாவட்ட துணைத்தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.