அரசியல் காழ்புணர்ச்சியால் நடந்த சோதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி கோவை, மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் வகையில் அரசியல் காழ்புணர்ச்சியால் நடந்தது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி அளித்தார். இன்று காலை முதல் 9 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.சோதனைக்கு பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் ,தொடர்ந்து காவல் துறையை தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள். சோதனையில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை 7100 ரூபாய் பணம், அம்மாவின் கம்மல் உள்ளிட்ட சிறு பொருட்களை எடுத்துள்ளனர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. கடந்த இரண்டு முறை நடந்த சோதனையிலும் எதுவும் கைப்பற்றவில்லை. அதிமுக அரசை கவிழ்க்க ஸ்டாலின் முயன்றார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருந்ததால் வழக்கு போடுகிறார்கள். அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னத்தை காப்பாற்றினோம். இதனால் பழிவாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மின்சார கட்டண உயர்வை திசை திருப்ப சோதனை நடைபெற்றது. திமுக அரசு பொதுமக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதிமுகவினரை முழுமையாக பழிவாங்குகிறார்கள். லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையின் போது முழு ஒத்துழைப்பு அளித்தோம் அதிமுக தொண்டர்கள், வக்கீல் சட்டையை கிழித்து துன்புறுத்தி, மண்டபத்தில் அடைத்துள்ளார்கள் காவல் துறை அத்துமீறலில் ஈடுபட்டார்கள். இது அரசியல் பழிவாங்குதலில் உச்சகட்டம். வருகின்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும். மீண்டும் எடப்பாடி முதலமைச்சராக வருவார். மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை முடக்க சோதனை நடத்தியுள்ளார்கள். எல்.இ.டி திட்டம் ஜெயலலிதா ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டது திமுக ஆட்சியில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. ஒன்றரை ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடிக்கும் மேல் அமைச்சர்களிடம் ஸ்டாலின் குடும்பம் வாங்கியுள்ளது என்றார். மேலும் அவர் திமுக அரசு மீடியாவை மிரட்டி, காவல் துறை கைக்கூலியாக வைத்துக் கொண்டு எந்த திட்டத்தையும் செய்யாத கையாளாத அரசு எந்த திட்டத்தையும் திமுக செய்யவில்லை. பத்திரிகை நண்பர்கள் ஜனநாயகத்தின் தூண். எந்த ஆட்சி மாற்றத்தையும் கொண்டு வரும் சக்தி பத்திரிகைக்கு உண்டு என தெரிவித்தார்.