
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் 43 வயது பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். பெண் கிராம நூலகம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கோவையில் உள்ள தலைமை நூலகத்தில் புத்தகம் இருப்பு கணக்கிடும் அதிகாரியாக இருக்கும் உக்கடம் கரும்புக்கடையை சேர்ந்த சுல்தான் மியாமணியம் (47) என்பவர் அந்த பெண் பணியாற்றும் நூலகத்துக்கு அடிக்கடி வந்து செல்வார். புத்தக இருப்புகளை சரி பார்க்க செல்லும் சுல்தான் மியாமணியம் பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்றார். மேலும் இரட்டை அர்த்தங்களில் பேசி உல்லாசத்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் உயர் அதிகாரிகளிடம் பெண் ஊழியர் புகார் அளித்தார். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பவத்தன்று பெண் பணியில் இருந்தபோது நூலகத்துக்கு வந்த சுல்தான் மியாமணியம் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதில் அதிர்ச்சியடைந்த பெண் சத்தம் போடவே அவர் அங்கு இருந்து சென்றார். பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக பெண் ஊழியர் தனது வீட்டிற்கு சென்றார். அங்கு சென்ற சுல்தான் மியாமணி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது பெண் சத்தம் போடவே சுல்தான் மியாமணியம் நடந்த சம்பவங்களை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து சென்றார். இதுகுறித்து பெண் காரமடை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், மானபங்கம் செய்ய முயன்றல், பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சுல்தான் மியாமணியம் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.