தனியார் வங்கி மேனேஜர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

கோவை, 

கோவை துடியலூர் அடுத்த தொப்பம்பட்டியை சேர்ந்தவர் முப்புடாதி ( 64). தனியார் வங்கி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு   வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மதுரைக்கு சென்றனர். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் பீரோவில்  இருந்த நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

வீடு திரும்பிய முப்புடாதி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது

கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் நகை மற்றும் பணம் ரூ.10 ஆயிரத்தைமர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து முப்புடாதி துடியலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் உருவதை வைத்துவீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற திருடர்களை தேடி வருகின்றனர்.