மூலிகை விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு


கோவை,
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் அமைந்துள்ள வெற்றி விநாயகர் கோவிலில் ஐந்து வகை மூலிகைகள் கொண்டு விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது. அருகம்புல்,வில்வம், அத்தி ,நாவல், நெல்லி , ஆகிய ஐந்து மூலிகைகளை அரைத்து கசாயத்தால் சித்தர்கள் முறைப்படி ஒரு மூலிகை விநாயகர் உருவாக்கப்பட்டது. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்கள் வழிபட்டனர் இந்த அதிசய விநாயகரை வணங்குவதால் குடும்பத்தில் தீமைகள் விலகி நன்மைகள் சேரும். என்று பொதுமக்களின் நம்பிக்கை இவ் விநாயகர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு மூலிகைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. கோவில் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி பூஜைகளை முன்னின்று நடத்தினர். மூலிகை விநாயகரை வழிபட அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.