கோவை பீளமேடு பகுதியில் மின் விபத்து இருவர் பலி பீளமேடுகிழக்கு பிரிவு உதவி மின் பொறியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மின்வாரியம் மாநகர் வட்டத்திற்குட்பட்ட பீளமேடு கிழக்கு பிரிவு அலுவலகப் பகுதியான மசக்காளிபாளையம் சின்னச்சாமிலே அவுட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கும்போது நவ இந்தியாவிலிருந்து கள்ளிமடை துணை மின் நிலையத்திற்கு செல்லும் 110 கிலோவாட் திறன் கொண்ட உயர் அழுத்த மின் கம்பி மீது வயர்கள் பட்டதால் அப்குதியில் வசிக்கும் கார்த்தி மற்றும் ஆனந்தகுமார் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .அவர்கள் பலனின்றி இறந்தனர். இது தொடர்பாக நேரில் கள ஆய்வு செய்த மேற்பார்வை பொறியாளர் நக்கீரன், செயற்பொறியாளர் சிவதாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது உயிரழுத்து மின் கம்பி செல்லும் பாதைக்கு கீழ் விதிகளை மீறி மின் இணைப்பு வழங்க முயற்சி செய்வது தெரிய வந்தது. விதிகளை மீறி மின் இணைப்பு வழங்கிய தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்கள் மீது வாரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்புச் செயலாளர் நா. லோகு தலைமை பொறியாளருக்கு புகார் மனு அனுப்பி இருந்தார். இதன் அடிப்படையில் ஒரு விசாரணை மேற்கொண்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமை பொறியாளர் அறிவுறுத்தியதின் பெயரில் நகரிய கோட்ட செயற்பொறியாளர் சிவதாஸ் இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பீளமேடு கிழக்கு பிரிவு உதவி மின் பொறியாளர் பிரேம் மீது பிரிவு 8ஏ படி நேற்று ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உத்தரவிடப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் மற்ற மாவட்டங்களில் நடந்திருந்தால் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய உத்தரவு விடப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால் கோவையில் சஸ்பெண்ட் செய்யப்படாமல் வெறும் ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மின்விபத்தில் இருவர் பலி
%d bloggers like this: