வாலிபருக்கு கத்திக்குத்து

கோவை ரத்தினபுரி கக்கன் வீதி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் என்பவரின் மகன் விக்னேஷ் (20). இவர் விசைத்தறி நிறுவனம் ஒன்றில் கூலிதொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது சகோதரி அதே பகுதியில் உள்ள கேட்டரிங் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சென்று வருகிறார் .அதற்காக விக்னேஷின் சகோதரி அவரது வீட்டின் அருகில் வசிக்கும் சஞ்சய் என்பவர் உடன் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இது விக்னேஷுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை விக்னேஷின் சகோதரி வேலைக்கு புறப்பட்டு சென்றார் .சிறிது நேரத்தில் விக்னேஷ் அவரது செல்போனுக்கு அழைத்த போது அவர் செல்போனை எடுத்துப் பேசவில்லை .இதை தொடர்ந்து விக்னேஷ் கேட்டரிங் நிறுவனத்தில் பணிபுரியும் சஞ்சய்க்கு போன் செய்து தனது சகோதரி எங்கே என கேட்டுள்ளார் .அப்போது சஞ்சய் தனக்கு தெரியாது என கூறியிருக்கிறார். இதை அடுத்து இருவருக்கும் போனில் சண்டை ஏற்பட்டது. பிறகு மதியம் 3 மணி அளவில் சஞ்சய் விக்னேஷின் வீட்டிற்கு வந்தார் .அங்கு வந்து விக்னேஷிடம் தகராறு செய்தார். தகராறு முற்றிய நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். அந்த சமயத்தில் சஞ்சய் மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து விக்னேஷ் மீது குத்த முயன்றார். அதை தடுக்க முயன்ற போது விக்னேஷின் தோள்பட்டையில் கத்தி குத்து விழுந்தது .பிறகு அருகில் உள்ளவர்கள் விக்னேஷை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது பற்றி தகவல் அறிந்த ரத்தினபுரி போலீசார் சஞ்சய் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *