இன்று காலை சரக்கு ஆட்டோ மோதி
11 வயது சிறுவன் பலி

வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கோபால். தூய்மை பணியாளரான இவரது மகன் திலீப் ( 11). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
இன்று கோபால் தனது மகன் திலீப்பை அழைத்து கொண்டு குடியிருப்பு பகுதி
அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார் . அப்போது அந்த வழியாக வந்த சரக்கு
ஆட்டோ பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சிறுவன் திலீப் சம்பவ
இடத்திலேயே பரிதாபமாக இறந்தான் . கோபால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.
இந்த தகவல் கிடைத்ததும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ
இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் சிறுவனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அந்த பகுதியை
சேர்ந்தவர்கள் கூறும்போது’ விபத்து நடந்த இடத்தில் பொது வாகனங்கள்
செல்லக்கூடிய வழி அல்ல. அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோவால் சிறுவன் இறந்துள்ளான். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *