வீட்டின் பூட்டை உடைத்து
நகை திருட்டு

கோவை குனியமுத்தூர் அடுத்த இடையார்பாளையம் மணிகண்டன் நகர் பகுதியில் சேர்ந்த முகமது அஷ்ரப் (24). இவர் பீளமேடு பகுதியில் உள்ள டைடல் பார்க் வளாகத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று மதியும் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் புறப்பட்டு திருமண விழாவுக்கு சென்று விட்டார். மீண்டும் நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பவுன் தங்க நகை திருடு போயிருந்தது. இதை தொடர்ந்து முகமது அஷ்ரப் குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.