சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய
திருநங்கைகள்

கோவை சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்குதல் நடத்திய திருநங்கைகள் ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் செல்வராஜ். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் .அப்போது சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே வாலிபர் ஒருவரை சில திருநங்கைகள் தாக்கி கொண்டிருப்பதை பார்த்தார் .இதை அடுத்த செல்வராஜ் அங்கு சென்று அந்த வாலிபரை மீட்டு என்ன என்று விசாரித்தார். அப்போது அந்த வாலிபர் தனது பெயர் மணிகண்டன் என்றும் தன்னை திருநங்கைகள் தாக்கி தன்னிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து செல்வராஜ் மணிகண்டன் இடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் எழுதிக் கொடுக்குமாறு கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து அங்கிருந்த திருநங்கைகள் ஆறு பேர் சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜை சூழ்ந்து கொண்டு தகராறு செய்தனர். மேலும் அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு தாக்கியுள்ளனர் .இதை தொடர்ந்து செல்வராஜ் அவர்களை பிடிக்க முயன்றார். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். தொடர்ந்து செல்வராஜ் சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் இது குறித்து புகார் அளித்தார். போலீசார் சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கிய ஆறு திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.