இலவச பிசியோதெரபி முகாம்

தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க கோவை மாவட்ட கிளை சார்பில் இலவச பிசியோதெரபி மருத்துவ ஆலோசனை முகாம் கோவை விளாங்குறிச்சியிலுள்ள ஆர்.ஜெ மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இலவச பிசியோதெரபி மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.இந்த முகாமை தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர்.ராஜா செல்வகுமார் மற்றும் மாநில பொதுச்செயலாளர் டாக்டர்.ராஜேஸ்கண்ணா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.முகாமில் மூட்டு நோய் வராமல் தடுக்கும் பிசியோதெரபி வழிமுறைகள் மற்றும் சிகிச்சைமருத்துவர்கள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்த பட்டது.அதேபோல் ஆசிரியர்களுக்கு ஏற்படும் கழுத்து மற்றும் முதுகு வலி மற்றும் வெரிகோஸ் வெயின் போன்ற பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.இதில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டு பயன் அடைந்துள்ளனர்.இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை சங்க கோவை மாவட்ட செயலாளர் டாக்டர்.சுகன்யா செய்திருந்தார்.இறுதியில் பள்ளி முதல்வர் நிர்மலா நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *