கோயம்புத்தூர் மாரத்தான் டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், இரண்டு வெற்றிகரமான மெய்நிகர் போட்டிகளுக்குப் பிறகு இந்நிகழ்வு மீண்டும் களத்தில் நிகழவுள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்தி, பெரிய கூட்டங்களை மீண்டும் கூட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை நகரமும் ஏற்பாட்டுக் குழுவும் இந்த ஆண்டை ஒரு புதிய உத்வேகத்துடன் கொண்டாடத் தயாராகிவிட்டன. “ஓடிப்போலாமா” என்ற விளம்பர வாசகம் எங்கும் ஒலிக்க தயாராகி உள்ளது. இந்த பத்தாவது பதிப்பிற்கு இன்று முதல் பதிவு செய்யலாம். போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் www.coimbatoremarathon.com என்ற இணையதளத்தை அணுகவும்.
கோவையின் முன்னணி நிகழ்வான இது நாடு முழுவதிலும் இருந்து அனைத்து தரப்பையும் சேர்ந்த 16,000க்கும் அதிகமான பங்கேற்பாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. CCF, கோயம்புத்தூர் ரன்னர்ஸ் அமைப்புடன் இணைந்து நடத்தும் இந்த மாரத்தான் அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 2013ம் ஆண்டு முதல், இந்த நிகழ்வு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அந்நோயுடன் போராடுபவர்களுக்கு ஆதரவளிக்கவும் உதவிவருகிறது. இந்த மாரத்தான் வாயிலாக திரட்டப்பட்ட நிதி, CCF இன் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு, புற்றுநோயுடன் போராடிய நூற்றுக்கணக்கானவர்கள் மீண்டு வரவும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கை மேம்படவும் உதவியுள்ளது.
இந்த நிகழ்வு ஹாஃப் மாரத்தான் (21.1 கிமீ) , 10 கிமீ ஓட்டம் மற்றும் 5 கிமீ நடை/ஓட்டம் என மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இதில் ஹாஃப் மாரத்தானுக்கு ரூ.1,200, 10 கிமீ ஓட்டத்திற்கு ரூ.1,000, 5 கி மீ நடை/ஓட்டத்திற்கு ரூ. 600 என பதிவுக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பரிசுத் தொகையாக ரூ.2.7 லட்சம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. ஹாஃப் மாரத்தான் பிரிவில் முதல் பரிசு ரூ. 25,000, 2ம் பரிசு ரூ. 15,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 10,000 வழங்கப்படும்., 10 கிமீ பிரிவில் பரிசுத் தொகை முதல் 3 இடங்களுக்கு ரூ. 15,000, ரூ. 10,000 மற்றும் ரூ.5,000 வழங்கப்படும். மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு தனியாக, ஹாஃப் மாரத்தான் பிரிவில் முதல் மூன்று இடங்களுக்கான பரிசுத் தொகை ரூ. 15,000, ரூ. 10,000 மற்றும் ரூ.5,000; 10 கிமீ ஓட்டத்திற்கு முதல், மூன்று இடங்களுக்கான பரிசுத் தொகை ரூ. 10,000, ரூ. 7,500 மற்றும் ரூ. 5,000 வழங்கப்படும்.
மேலும் தகவலுக்கு, info@coimbatoremarathon.com இல் விபரம் பெறலாம்.
%d bloggers like this: