கோவையில் 1,06,641  பேருக்கு நலத்திட்ட உதவிகள் முதல்வர்  வழங்குகிறார்;

அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி.

கோவை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும்  23 ந் தேதி மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம்கோவை வருகிறார். மறுநாள்அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.

இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில்  மாலை நடைபெற்றது.கூட்டத்துக்கு தமிழக மின்சாரம்,மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். கோவை மாவட்ட  கலெக்டர் ஜி.எஸ்.சமீரன்,,மாநகராட்சி ஆணையாளர்மு.பிரதாப்,மாநகர போலீஸ் கமிஷனர்பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பத்திரிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும்அமைச்சர் செந்தில்பாலாஜிசெய்தியாளர்களிடம் கூறியதாவது ;தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்வரும் 23 ந் தேதிமாலைகோவை வருகிறார்.  24 ந் தேதிகாலை  10மணிக்குகோவை கிணத்துக்கடவுசட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொண்டு1.06,641பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

ஒரேஅரங்கில்ஒரே மாவட்டத்தில் ஒரே நாளில்இத்தனைபேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது இதுவேமுதல்முறை ஆகும்.இது  வரலாற்றுசிறப்புமிக்க நிகழ்ச்சிஆகும்.இதே மேடையில்நிறைவுற்ற பலதிட்டப் பணிகளையும்முதல்வர் தொடங்கி வைக்கிறார்.அத்துடன் m 761புதியபணிகளுக்கும்அடிக்கல் நாட்டுகிறார்.

அன்று இரவுபொள்ளாச்சியில்மாற்றுக் கட்சியினர் திமுக வில்இணையும் விழா நடக்கிறது. அதில்முதல்வர்முன்னிலையில்பல ஆயிரம்பேர் திமுகவில்இணைகிறார்கள். வரும்  23மற்றும் 24 ஆகிய இரண்டு தினங்கள் முதல்வருக்குஉற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.இதில் ஒன்றரைலட்சத்துக்கும்அதிகமானமக்கள் பங்கேற்பார்கள். ஒரு மாநிலத்தின் வளர்ச்சஒட்டுமொத்தஇந்தியாவின் வளர்ச்சிஎன்பதுஅனைவருக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டும்.

அதனால் தான்தமிழகத்தில்அன்றைய முதல்வர்கலைஞர் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கினார். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அவர்கள் விலை நிர்ணயம் செய்யமுடியாத நிலைஉள்ளது. அவர்கள் எந்தவிதமான நிரந்தர தீர்வு்ம் இல்லாமல்சிரமத்தைஎதிர்கொண்டபோதுஅவர்களுக்குஇலவச மின்சாரம் வழங்கி கலைஞர்உதவினார்.

 விவசாயிகளை காப்பாற்றினார்,அதை நமதுமுதல்வரும் தொடர்கிறார்.இலவச மின்சாரம் என்பதுஅடித்தட்டுவிவசாய மக்களுக்குஅவசியமான ஒன்றாக உள்ளது.இதே போல் மாணவ-மாணவியர்களுக்கு லேப்டாப்,சைக்கிள்மிக முக்கியமான திட்டமாகஉள்ளது. விசைத்தறி நெசவாளர்களின் ஏழ்மைநிலையை உணர்ந்துஅவர்களுக்கும்இலவச மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது.அடித்தட்டு மக்களைமேலே மேலே தூக்கிவிடுவதற்காக இதுபோன்றஇலவசங்கள் வழங்கப்படுகிறது.

ஆனால்தமிழகத்தில் வாய்சவடால் விடக்கூடியசில நபர்கள்,இத்திட்டத்தை திர்க்கிறார்கள்.இரட்டைவேடம்போடுகிறார்கள்.அந்தகட்சியினர்.பிறமாநிலங்களில்தேர்தலைசந்திக்கும்போதுஅவர்களேஅங்குஇலவச திட்டங்களை அறிவிக்கிறார்கள். ஆனால்இங்கு இலவசங்களை ரத்து செய்ய வேண்டும் என்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதே தமிழக முதல்-அமைச்சரின் கோட்பாடு.

அதனால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தஇலவச திட்டங்களை தொடர்ந்து வழங்குகிறார். குறிப்பாகமின்சார வாரியத்திலும் இந்த இலவச திட்டம் தொடரும்.கூட்டத்திற்கும், குரூப்பிற்கும்வித்தியாசம் உள்ளது கோவையில்ஒரு குரூப்போஸ்டர் விவகாரத்தைகையில்எடுத்து அரசியல்செய்கிறது.அரசுஅதிகாரிகளைமிரட்டுகிறார்கள்.அவர்கள் மீது காவல்துறைமூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இனியும் இந்த மிரட்டல்தொடர்ந்தால அரசின் நடவடிக்கை மிக கடுமையாகஇருக்கும். முதல்வர் வருகையின்போது கொடிகட்டக் கூடாது,பிளக்ஸ் பேனர் வைக்கக் கூடாது,அலங்கார வளைவுவைக்கக் கூடாதுஎன முதல்அமைச்சரே உத்தரவிட்டுள்ளார். அதை நாங்கள்தொடர்ந்துபின்பற்றி வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்