கோவையில் மருத்துவ மாணவா் தூக்கு போட்டு தற்கொலை

ஆந்திர மாநிலம், நெல்லூரை சோ்ந்தவா் பிரவீன் அன்னதத்தா (33). இவா் எம்.பி.பி.எஸ். படித்து முடித்துவிட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை நரம்பியல் மருத்துவம் படித்து வந்தாா். இதற்காக கீதா ஹால் சாலையில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தாா்.
கடந்த ஒரு வாரமாக பிரவீன் மருத்துவக் கல்லூரிக்குச் செல்லாமல் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரவீன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸில் புகாா் செய்யப்பட்டது. போலீஸாா், பிரவீனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.