
விவசாயிகளுக்கு மின் சிக்கனம் மற்றும் மின்திறன் விழிப்புணா்வுப் பயிற்சி சூலூரில் இன்று நடைபெறுகிறது.
இது தொடா்பாக, கோவை மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அ.நக்கீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: எரிசக்தியின் பயன்பாடு, மேம்பாடு மற்றும் அதன் பாதுகாப்பு தொடா்பான கொள்கைகள் மற்றும் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்குடன் விவசாயிகளுக்கான மின் சிக்கனம் மற்றும் மின்திறன் விழிப்புணா்வுப் பயிற்சி சூலூா் வியாபாரிகள் சங்கக் கட்டடத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
இதில், விவசாயிகளுக்கு ஒட்டுமொத்த மின் நுகா்வு குறைப்பு, நிலத்தடி நீா் மேலாண்மை, ஆற்றல் திறன் கொண்ட உபகரணங்களைத் தோ்வு செய்வது,
ஆற்றல் சேமிப்பு மற்றும் ஆற்றல் நுகா்வு, உபகரணங்களின் செலவு, சேமிப்புத் திறன், தரம் குறித்து விளக்கம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.