
நாட்டின் 75 வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் மூன்று நாட்கள் தேசிய கொடியேற்றி மரியாதை செய்யப்பட்டது.மேலும் 13 ஆம் தேதி துவங்கி 15 ஆம் தேதி மாலை வரை மட்டுமே தேசிய கொடியை வீடுகளின் முன் கட்ட வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந் நிலையில் கோவை சுந்தராபுரம், மாச்சம்பாளையம் 94 வது வார்டில் சண்முகம் என்பவரது வீட்டில் தேசியகொடியின் கீழ் யேசுவே இந்தியாவை ஆசீர்வதிப்பீர் என்ற வாசகத்துடன் கொடியேற்றி உள்ளார்.
சுதந்திர தினம் முடிந்து இரண்டு நாள் ஆகிய நிலையில் இன்று காலை வரை தேசிய கொடியை இறக்காமல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது இது பற்றி தகவல் தெரிந்த அப்பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு புகார் அளிக்க குவிந்தனர்.
இதை அடுத்து குனியமுத்தூர் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்
