
கோவை பெரிய கடை வீதி பகுதியில் சரவணா ஜூவல்லரி என்ற பெயரில் நகை கடை நடத்தி வருபவர் சுப்பையன் என்பவரின் மகன் சிவகுமார்( 48). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது நகை கடைக்கு ஹிஜாப் அணிந்திருந்த இரண்டு பெண்கள் வந்திருந்தனர். அவர்கள் பல்வேறு நகை மாடல்களை வாங்குவது போல நடித்து பார்த்து வந்தனர். பிறகு ஐந்து பவுன் செயினை வாங்குவதாக கூறி பார்த்துள்ளனர். பிறகு அவர்கள் பணம் குறைவாக உள்ளது என்றும் பிறகு வந்து வாங்கிக் கொள்வதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதன் பிறகு அவர் நகைகளை எடுத்து மீண்டும் அலமாரியில் வைத்து விட்டார். பின்னர் சில நாட்கள் கழித்து அவர் நகையை பார்த்த பொழுது 5 பவுன் தங்கச் செயின் மட்டும் கவரிங் போல இருந்தது. இதை அடுத்து அவர் நகையை சோதித்து பார்த்த போது அந்த நகை கவரிங் என்பது தெரிய வந்தது .இதை தொடர்ந்து அவர் பெரிய கடை வீதி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார்்் வழக்குு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஜிகாப் அணிந்து வந்த பெண்கள் வேறு எங்கெங்கு சென்றார்கள் என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்தனர் இந்நிலையில் இந்த நூதன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழ மாதிரை பகுதியைச் சேர்ந்த இன ராமகிருஷ்ணன் என்பவரின் மனைவி சுமதிி(50) மற்றும் அவரது மகளான சரவணன் என்பவரது மனைவி பிரியதர்ஷினி (28 )ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் இதேே போல வேறு எங்கும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்களா இவர்கள் மீது வேறு வழக்கு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.