
கனல்கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட இந்துமுன்னணி சார்பில் காந்திபார்க் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்துமுன்னணியின் துணை அமைப்பான இந்து கலை இலக்கிய முன்னணியின் மாநில பொறுப்பாளர் கனல்கண்ணன் ஜுலை 31 ஆம்தேதி சென்னையில் நடைபெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணத்தில் கடவுளை கும்பிடும் ஸ்ரீரங்கம் கோவில் முன்பு கடவுள் இல்லை என்ற ஈ.வே.ராவின் சிலை எதற்கு என பேசினார்.
இதற்காக கனல்கண்ணன் நேற்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
சிவபெருமானை ஆபாசமாக பேசியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் நியாயம் பேசிய் கனல்கண்ணன் கைதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.இதை கண்டிக்கும் விதமாக இந்துமுன்னணி சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது. கோவை மாநகர் மாவட்ட இந்துமுன்னணி சார்பில் காந்திபார்க் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நூறுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.காவல்துறையினர் இந்துமுன்னணியினரை கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே.தசரதன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி முன்னிலை வகித்தார்.
மாநில நிர்வாககுழு உறுப்பினர் .சதிஷ் கோட்ட பேச்சாளர்ஆ.கிருஷ்ணன் மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர் மாவட்ட செயலாளர்கள் மகேஷ்வரன் சோமமேசுந்தரம் ஆகியோர் மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் ஆகியோர் உடனிருந்தார்.