சென்னை நகை கொள்ளை விவகாரம்
கோவை நகை வியாபாரியிடம் போலீசார் விசாரணை

சென்னை அரும்பாக்கத்தில் தனியார் வங்கியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது.இந்த வழக்கில் இன்னும் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட வில்லை.இந்நிலையில்
கோவையில் தங்க நகை கடை உரிமையாளர்
ஸ்ரீ வஸ்தவ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் நகைகடை உரிமையாளர்
ஸ்ரீ வஸ்தவ் என்பவரிடம் விசாரணை நடை பெற்று வருகிறது.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்க கோவை நகைகடை உரிமையாளரிடம் கொள்ளை கும்பல் பேச்சுவார்த்தை நடத்தியது தெரியவந்த நிலையில் ஸ்ரீ வஸ்தவ்வை பிடித்து விசாரிப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் நகைகடை உரிமையாளர் ஸ்ரீ வஸ்தவ்விடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *