
கோவை,
கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மகள் எஸ்.ரிதன்யா காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா பிப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை கணபதி பகுதியில் உள்ள ஓசோன் யோகா மையத்தில் யோகா பயிற்சி பெற்று வருகிறார். ரிதன்யா மாவட்ட மற்றும் மாநில அளவிலான பல்வேறு யோகா போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றார். இதைத்தொடர்ந்து ரிதன்யா அந்தமான் போர்ட் பிளேயரில் ஜூலை 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறும் தேசிய அளவிலான யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இது குறித்து மாணவி எஸ்.ரிதன்யா கூறும் போது, நூறு வயது வரை வாழ்ந்த யோகா பாட்டி நானம்மாள் போல ஆரோக்கியமான நோயற்ற வாழ்வு வாழவேண்டும் என்ற நோக்கத்தில் யோகா கற்று கொண்டு வருவதாக கூறினார். தேசிய யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவி எஸ்.ரிதன்யாவுக்கு ஓசோன் யோகா மைய நிறுவனர் டாக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.