

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு காவல்துறை நடத்திய வாகன சோதனையில் கை துப்பாக்கி வெடி மருந்து முகமூடி கத்திய உள்ளிட்ட ஆயுதங்களுடன் இரண்டு பட்டதாரி இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் இதனைத் தொடர்ந்து என் ஐ ஏ அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கோவை ஆலந்துறை பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியை ச் சேர்ந்த ரஞ்சித் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர் அதேபோல் காளப்பட்டி சரஸ்வதி கார்டன் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த முருகன் என்பவரின் வீட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட என் ஐ ஏ அதிகாரிகள் இரண்டு வாகனத்தில் வந்து சோதனை மேற்கொண்டனர் இதனைத் தொடர்ந்து முருகன் என்பவரிடமிருந்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்துள்ளனர் மேலும் இவர்கள் இருவருக்கும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் பணபரிவர்த்தனை நடந்துள்ளது என்ற அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்