கோவை கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் சார்பாக பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. கலை நிகழ்ச்சிகளும் குழந்தைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்று இருந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தொண்டாமுத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் மணிகண்டன் என்பவர் மேடையில் இருந்த ஒருவரை அழைத்து மிரட்டியுள்ளார். மேலும் எனக்கு தரவேண்டியதை தந்தால் மட்டுமே விழாவை நடத்தமுடியும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து தலைமை காவலர் கேட்ட ஆயிரம் ரூபாயை பொதுமக்கள் தலைமை காவலரிடம் லஞ்சமாக கொடுத்துள்ளனர். இதை அந்தபகுதியில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வந்த காவலர் ஒருவரே லஞ்சம் கொடுத்தால்தான் விழா நடத்த முடியும் என்று அடாவடியில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இன்று தலைமை காவலர் மணிகண்டன் லஞ்சம் வாங்கும் வீடியோ ஆதாரங்களுடன் பொதுமக்கள் கோவை மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அலுவலகத்தில் வீடியோ ஆதாரங்களுடன் புகாரளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *