

கோவை ஆர் எஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது வீட்டில் கீழ்தளத்தில் சங்கரின் வயதான தந்தை ஆனந்த நாராயணன் மற்றும் சீதாலட்சுமி ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள லேண்ட்லைன் போனுக்கு அழைப்பு வந்துள்ளது . அந்த அழைப்பை அனந்த நாராயணன் எடுத்து பேசியுள்ளார் .அப்போது எதிர் முனையில் பேசியவர்கள் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவிலிருந்து பேசுவதாகவும் வங்கி கணக்கு மற்றும் ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்குமாறு கூறியிருக்கின்றனர்.மேலும் வங்கி கணக்குகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என கூறியிருக்கின்றனர். இதை நம்பிய அனந்த நாராயணன் அவருடைய வங்கிக் கணக்கு எண் ஏடிஎம் கார்டு விவரங்கள் மற்றும் மனைவியுடைய வங்கி கணக்கு விபரங்களையும் கூறியுள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் அனந்த கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி வங்கி கணக்கில் இருந்த 21 லட்சத்து 56 ஆயிரத்து 35 ரூபாயை மர்ம நபர்கள் தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றி விட்டனர் .இது பற்றிய விவரம் தெரியவந்த அனந்த நாராயணன் தனது மருமகள் வித்யாவிடம் இது குறித்த விபரத்தை தெரிவித்தார் .இதை தொடர்ந்து வித்யா கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.