
கோவை சாய்பாபா காலனி போலீசார் நேற்று மாலை மேட்டுப்பாளையம் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் பைக்கில் மூன்று வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்களை காவலர் ஆனந்த் என்பவர் நிறுத்தி விசாரித்துள்ளார் .அப்போது பைக்கில் வந்தவர்கள் காவலர் ஆனந்திடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டனர் .பின்னர் திடீரென அந்த வாலிபர்கள் காவலர் ஆனந்தை சரமாரியாக தாக்கினர். உடனே அருகில் இருந்த போலீசார் காவலரை தாக்கிய மூன்று வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர் .விசாரணையில் கோவை செல்வபுரம் கல்லா மேடு பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம் சாகுல் ஹமீது( 25 ),குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அபுதாபி என்பவரின் மகன் ஹபீப் அலி( 25) செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது உசேன் என்பவரின் மகன் அலாவுதீன் முகமது உசேன் (25) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.