கோவை,
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவருக்கும் கரும்புகடை சாரமேடு வள்ளல் நகர் பகுதியை சேர்ந்த ஹாலிதீன் என்பவரின் மகன் செய்யது முஹம்மதுவுக்கும் கடந்த ஜூன் 11 ஆம் தேதி நடந்தது.செய்யது முஹம்மது பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.திருமணத்திற்க்கு பிறகு இளம்பெண் கணவரின் வீட்டில் வாழ துவங்கினார். இந்த நிலையில் இளம்பெண்  இடது கையில் மணிக்கட்டிற்க்கு மேல் ஒரு ரூபாய் நாணயம் அளவில் தோல் நிறம் மாறி இருந்தது .அதனை அவர் மாமியாரிடம் காட்டியுள்ளார். உடனே மாமியார் தன் மகளான தஸ்லிமா நஸ் ரீனிடம் கூறி இளம்பெண்ணை கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள மருத்துவர் முஸ்தபாவுடம் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றுள்ளார், அவர் இளம்பெண்னுக்கு வந்திருப்பது வெண்குஷ்டம் இது உடல் முழுவதும் பரவி விடும், தொற்று வியாதி என கூறியுள்ளார். அதனை இளம்பெண் மறுத்துள்ளார். தொடர்ந்து பீளமேடு பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையில் உள்ள தோல் மருத்துவர்களை சந்தித்து இளம்பெண்னை பரிசோதனை செய்தார்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு ஆகும். இது தொற்று நோய் அல்ல ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு தொற்றும் தன்மை கொண்டது அல்ல என மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கினர். இதனை இளம்பெண் பெற்றோர்கள் கொண்டு சென்று செய்யது முகமது மற்றும் பெற்றோர்களிடம் காண்பித்த போதும் அவர்கள் இதனை எல்லாம் ஏற்கவில்லை. திருமணம் முடிந்த 10 நாட்களிலேயே மாமனார் மாமியார் நாத்தனர் ஆகியோர் இளம்பெண்ணை கணவரோடு வாழ விடாமல் வீட்டை விட்டு துரத்தி உள்ளனர். மனைவியை விட்டுவிட்டு செய்யது முகமதுவும் பெங்களூர் சென்று விட்டார். இந்நிலையில் இளம்பெண் பெற்றோர் அவரை அழைத்து சென்று கணவரின் வீட்டில் விட்டுச் சென்றனர். அந்த சமயத்தில் இளம்பெண்ணுக்கு  மாமியார் மற்றும் அவரது குடும்பத்தார் உணவு, தண்ணீர் எதையும் வழங்காமல் கொடுமைப்படுத்தி உள்ளனர். இளம்பெண்ணை  கணவரின் தம்பி மற்றும் மாமனார் போதையில்  தாக்க முயன்றார்கள்.உடனே இளம்பெண்  போலீசில் புகார் அளித்தார். போலீசார் மற்றும் இருகுடும்பதினரும் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில்
இளம்பெண்ணுக்கு வந்திருப்பது
 வெண் குஷ்டம் தான் என்றும் வெண் குஷ்டம் உள்ளதை மறைத்து திருமணம் செய்ததாக கூறி உள்ளனர் .தொடர்ந்து இளம்பெண்ணை அவரது கணவர் கட்டாய படுத்தி அழைத்து கொண்டு சென்று பெற்றோர் வீட்டின் வாசலிலேயே விட்டு விட்டு சென்று விட்டார். இதனால் மிகுந்த அதிர்ச்சி அடைந்த இளம்பெண் குடும்பத்தார், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு உள்ள தோல் மருத்துவர்களை சந்தித்துள்ளனர், இளம்பெண்ணுக்கு சாதாரண தோல் நிறம் மாற்றம் தான் என சான்று அளித்தனர். அதன் பிறகும் இளம்பெண்ணை அவரது கணவர் குடும்பத்தார் ஏற்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்.
இதையடுத்து இளம்பெண் கோவை கமிஷ்னர்  பாலகிருஷ்ணனை சந்தித்து புகார் மனு அளித்தார். அதை தொடர்ந்து போத்தனூர் அனைத்து மகளிர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகாரை விசாரித்துள்ளனர், திருமணமாகி ஒரே வாரத்தில் வெண்குஷ்டம் என கூறி தன்னை கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் கொடுமை படுத்தியவர்கள் மீது போலீசார் இளம்பெண்ணின்
 கணவர் செய்யது முஹம்மது , மாமனார் ஹால்தீன் ,மாமியார் பர்வின் பானு ,கணவரின் சகோதரர் ரியாஸ் அஹ்மது , கணவரின் சகோதரி தஸ்லீமா நஸ்ரின் ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.தொடர்ந்து தலைமறைவாக உள்ள 5 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *