
கோவை,
கோவை அதிரதன் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் சிலம்ப மாணவர்கள் 2.15மணி நேரம் இடை நில்லாது சிலம்பத்தை சுற்றி ஆஸ்கர் புக் ஆப் ரெக்கார்ட் சாதனையை நிகழ்த்தினர்.திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா திரு இருதய நடுநிலைப் பள்ளியில் ஆத்தூர் அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி, சி அறக்கட்டளை மற்றும் தெய்வத்திரு.மனோகரன் இலவச கல்வி மையம் சார்பாக சாலை பாதுகாப்பை வலியுறுத்தி, மின்னொளியில் சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
தற்காப்பு கலைகளான குத்துச்சண்டை, கராத்தே, சிலம்பம் மற்றும் வில்வித்தை பயிற்சி கலைநிகழ்வுகள் பயிற்சி மாணவர்களின் வாயிலாக நிகழ்த்திக் காட்டப்பட்டது.பின்னர் கோவை அதிரதன் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் சிலம்ப மாணவர்கள் 2.15மணி நேரம் இடை நில்லாது சிலம்பத்தை சுற்றி ஆஸ்கர் புக் ஆப் ரெக்கார்ட் சாதனையை நிகழ்த்தினர்.
இரெண்டே கால் மணி நேரம் இடை நில்லாது மின்னொளி சிலம்பம் சுற்றி சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு ஆஸ்கர் புத்தக நிறுவனர் கதிரவன் சாதனைக்கான சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

தொடர்ந்து மாணவ மாணவியர்களுக்கு சிறப்பாக சிலம்பம், யோகா, கராத்தே போன்ற பயிற்சிகளை அளித்து வருவதற்காக தமிழ் நாடு கலை இலக்கிய பெருமன்றம் ,அமேசிங் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி,சி அறக்கட்டளை சார்பாக கோவை அதிரதன் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் கலை வளர் மணி ஆசான் கருணாகரனுக்கு கலை வித்தகர் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய பாரம்பரிய சிலம்பம் விளையாட்டுக் கழகத்தின் துணைத் தலைவரும் அதிரதின் தற்காப்பு கலை பயிற்சி துணை பயிற்சியாளர் நாகமணி உட்பட பலர் பங்கேற்றனர்.