
தமிழ்நாட்டில் சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரையில் ஜியோவில் 5ஜி சேவை தொடங்கப்படவுள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜ் நாளை தொடங்கி வைக்கிறார்.
இந்தியா முழுவதும் 2022 அக்டோபர் மாதம் 1 ஆம் நாள் அதிவேக 5ஜி சேவையைப் பிரதமர் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக சென்னை, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய இடங்களில் 5ஜி சேவை செயல்பாட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.