கோவை பீளமேட்டில் 250 ரூபாயை திருப்பி தராதவர் அடித்து கொலை

கோவை,

கோவை பீளமேடு அடுத்த பீளமேடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கங்கேஸ்வரன்( 32) கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் லட்சுமணன்( 40) என்பவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 250 ரூபாய் பணம் கடனாக வாங்கி இருந்தார். ஆனால் கங்கேஸ்வரன் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் இருந்துள்ளார். பலமுறை லட்சுமணன் பணத்தை கேட்டும் அவர் தராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கங்கேஸ்வரன் இன்று காலை பீளமேடு அடுத்த சௌரிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பு நின்று கொண்டிருப்பதாக லட்சுமணனுக்கு தகவல் கிடைத்தது. உடனே லட்சுமணன் அங்கு சென்று கங்கேஸ்வரனிடம் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில்  லட்சுமணன் பணம் வாங்கிய கங்கேஸ்வரனை ஓங்கி அறைந்தார். இதில் வெங்கடேஸ்வரன்  அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்   கங்கேஸ்வரனை பரிசோதித்துப் பார்த்தபோது அவர்  ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த பீளமேடு  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும கங்கேஸ்வரணை அரைந்து கொலை செய்ததாக லட்சுமணனை கைது செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர். கோவையில் 250 ரூபாய் பணத்தை திருப்பித் தராதவரை ஓங்கி  அடைந்தபோது சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.