
கோவை,
சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய அனைத்து விமானநிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கோவை சர்வதேச விமானநிலையத்திலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிக ளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரி சோதனை செய்யப்பட்டு வருகிறது. கோவை விமானநிலையத்தில் இருந்து சீனாவுக்கு நேரடி விமான சேவை இல்லை. இருந்தபோ திலும் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வரும் பயணிகளுக்கு விமானநிலை யத்தில் கட்டாயமாக கொரோனா பரிசோ தனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத் தில் 182 பயணிகள் வந்து இறங்கினர். அவர் களில் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள மகுடம்சாவடியை சேர்ந்த பய ணியும் ஒருவரும் ஆவார். அவருடைய பாஸ் போர்ட்டை ஆய்வு செய்தபோது அவர் சீனா வில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை விமானநிலையம் வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு கோவை விமானநி லையத்தில் கொரோனா பரிசோதனை செய் யப்பட்டது. இதனை தொடர்ந்து அதன் முடிவு நேற்று வந்தது. அதில் அவருக்கு கொரோனா உறுதியானது. மேலும் அவருக்கு எந்தவகை யான கொரோனா என்பது குறித்தும் சுகாதா ரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகி றார்கள்.
இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்து றைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கொரோனா பாதிப்புக்குள்ளானவரை தனிமைப்படுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அவருடன் கோவை வந்த சக விமான பயணி களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்ய நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.