
கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்க மருத்துவமனைகளில், 6,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.புதிய வகை கொரோனாவான ‘பி.எப். 7’ இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.அனைத்து தரப்பினரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதை அடுத்து, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளும், தயார் நிலையில் இருக்க சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில், 6,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.கோவை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில்,”கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு,மாவட்டத்தில், 6,000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 3,000 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் உள்ளன. அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான மருந்துகள் உள்ளிட்ட வசதிகளை தயார்நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதுஎன்றார்.