
கோவை,
விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு நினைவு தினத்தையொட்டி இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் அழகு ஜெயபாலன், நவீன்குமார் மற்றும் நாகராஜ், விஜயகுமார், சவுந்திர குமார், ஆகாஷ் உள்பட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.