
விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 38-வது நினைவு தினத்தையொட்டி கோவை வையம்பாளையத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சரும், எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., தலைமையில் நாராயணசாமி நாயுடுவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அம்மன் கே.அர்ச்சுணன், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.ஜி அருண்குமார், எம்.எல்.ஏ.க்கள் சூலூர் கந்தசாமி, அமல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்ராஜ், கொண்டையம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், எஸ்.எஸ்.குளம் ஒன்றிய தலைவர் கவிதா சண்முகசுந்தரம், வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் குறிஞ்சி மலர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.