கோவை,
தமிழகத்தில் முதல் முறையாக இன்டெலி ஜென்ட் டிராபிக் மேனே ஜ்மென்ட் சிஸ்டம் என்ற புதிய திட்டம் கோவையில் செயல்ப டுத்தப்பட உள்ளது. மாநகர போலீஸ், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி என 3 துறையினர் இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்துக்கு 8 கோடி ரூபாயை, நான்கு பொதுத்துறை வங்கிகள், சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் வழங்கியுள்ளன. மீதமுள்ள 12 கோடி ரூபாய் சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்பட உள்ளது. மாநகரில் தற்போது 42 போக்குவரத்து சிக்னல்கள் செயல்பாட்டில் உள்ளன. இன்னும் 20 இடங்களில் புதிதாக சிக்னல்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த 62 இடங்களிலும் புதிய வடிவத்திலான சிக்னல் கம்பங்கள் நிறுவப்பட உள்ளன. இந்த கம்பங்களில், கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட காமிரா, மைக், ஸ்பீக்கர் ஆகியவை இருக்கும். இந்த சிக்னல் கம்பங்கள், போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி கமிஷனர் அலுவலகம் ஆகிய இடங்களில் இருக்கும் கட்டுப்பாட்டு அறைகளுடன் இணை க்கப்படும். போலீஸ் கமிஷனர், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர், கட்டுப்பாட்டு அறையில் இருந்து மைக் மூலம் உத்தரவுகளை பிறப்பிக்கும் வகையில், இது நடைமுறைபட்டுள்ளது. புதிய திட்டப்படி, மாநகர சாலைகளில் 350 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஆப்டிக்கல் பைபர் கேபிள் உதவியுடன், ‘லேன்’ எனப்படும் ‘லோக்கல் ஏரியா நெட்வொர்க்’ உருவாக்கப்படும். இதற்கென 716 இடங்களில் 6 ஆயிரம் கம்பங்கள் நிறுவப்பட உள்ளன.சிக்னல் கம்பங்கள் அனைத்தும் ‘லேன்’ நெட் வொர்க் உடன் இணைக்கப்படும். மாநகரில் புதிதாக நிறுவப்படும் 1,400 அதிநவீன கண்காணிப்பு காமிராக்களும், இந்த தொடர்பில் இணைக்கப்பட உள்ளன. 1,400 அதிநவீன ம், முக அடையாளம் வைத்து ஆட்களை கண்டறியும் மென்பொருளுடன் இணைக்கப்பட்டவையாக இருக்கும். இதன் மூலம் சாலையில் செல்பவர்களை, கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர், எளிதில் அடையாளம் கண்டறிய முடியும். இந்த புதிய திட்டம் மூலம், போக்குவரத்து சீரமைக்கும் பணி எளிதாகும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண முடியும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மாநகரில் பல்வேறு பொது இடங்களில் 24 ஆயிரம் ‘சிசிடிவி’ காமிராக்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. புதிதாக 1,400 அதிநவீன மென்பொருள் இணைக்கப்பட்ட காமி ராக்களும், கண்காணிப்புக்கு சேரும்போது நகரின் பாதுகாப்பு வலுப்பெறும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
%d bloggers like this: