உலக நலன் வேண்டி உஜ்ஜைனி மகா காலகாலேஸ்வரர் ஆலயத்தில் பாபுஜி சுவாமிகள் சிறப்பு வழிபாடு   

கோவை,

கோவை மலுமிச்சம்பட்டி நாகசக்தி தியான பீடத்தின் தலைவர் சித்தர்  பாபுஜி சுவாமிகள் கொரோனா வைரஸ் நான்காம் அலை இந்தியாவை தாக்க கூடாது என்பதற்காக வேண்டி

மத்தியபிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி ஸ்ரீ மகா காலகாலேஸ்வரர் ஓம்கார ஈஸ்வரர் காலபைரவர் போன்ற ஜோதி லிங்கங்களில் உலக நலன் வேண்டி சிறப்பு யாக பூஜை செய்தார்.

தற்பொழுது சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் நான்காம் அலை ஜனவரி பிப்ரவரி மாதத்தில் வரக்கூடாது என்பதற்காக வேண்டி உலக நலன் வேண்டி ஜோதிலிங்கங்களுக்கு மூலிகை அபிஷேகம் பால் அபிஷேகம் தீர்த்த அபிஷேகம்1008 மலர் அர்ச்சனை சிறப்பு வழிபாடு கடந்த செவ்வாய் புதன் இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது . உலகில் நவகிரகங்கள் நவலிங்கங்களாக உள்ள ஓம் மகா காலகாலேஸ்வரர் ஆலயத்தில் கடும் குளிரில் கொரோனா வைரஸ் மீண்டும் வரக்கூடாது என்பதற்கு நவகிரகசாந்தி சிறப்பு அபிஷேக பூஜை மற்றும் ஓம் மங்களேஸ்வர் ஆலயத்தில் செவ்வாய் பகவானுக்கு பூமி  மாதாவுக்கு பூமி சாந்தி பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து கால பைரவா சன்னிதானத்தில் தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடைபெறக்கூடாது என்பதற்காக  காலபைரவர் பாதுகாப்பு வேண்டி சிறப்பு மதுபான அபிஷேகமும்,  54 சக்தி பீடங்களில் ஒன்றான உஜ்ஜயினி மகாகாளி ஹர்ஷத் மாதா ஆலய கருவறையில் 1008 மலர் அர்ச்சனை பூஜை மற்றும் நர்மதை அணைக்கட்டு பகுதியில் திரிவேணி சங்கத்தில்புனித நீராடி ஸ்ரீ சக்கர சூலாயுத பூஜை ஓம்கார ஈஸ்வரர் சிவலிங்கத்திற்கு 18 திவ்ய திரவிய அபிஷேகம் 1008 மலரட்சனை நிலவேம்பு சித்தர் ஜெகத்குரு குரு பாபுஜி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.சிறப்பு வழிபாடுகளை பண்டிட்ஸ்ரீ ஹாச்சு பண்டிட்  , ராகேஷ் பண்டிட் , பாலா சாஸ்திரி,மில் நடராஜ், ஜெயகாந்தன் ருத்ர ஜெபம் மந்திரங்களை உலக நலன் வேண்டி ஜெபித்தனர். தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமை நர்மதா நதி தீர்த்த அபிஷேகம் நாகசக்தி அம்மனுக்கு நடைபெறும் என்று ஜகத்குரு ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தெரிவித்தார்.