அர்ஜுன் இன்ஜினியரிங் கல்லூரி பட்டமளிப்பு விழா

கோவை,

கோவை பொள்ளாச்சி சாலையில் தாமரைக் குளம் பகுதியில் உள்ள அர்ஜுன் காலேஜ் ஆப் டெக்னாலஜியின்  பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பி. மன்னர் ஜவகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .சிறப்பு  அழைப்பாளராக மாற்றம் பவுண்டேஷன் நிறுவனர் ஜெ. சுஜித் குமார் கலந்து கொண்டு பேசும் போது இன்ஜினியரிங் படிப்பை தரக்குறைவாக எண்ண வேண்டாம். இன்றைய உலகின் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் இன்ஜினியர்கள் தான் கண்டுபிடித்தார்கள். இன்ஜினியரிங்  மாணவர்கள் தங்கள் தகுதிக்கும் படிப்புக்கும் உரிய வேலை கிடைக்கவில்லை என காத்திருக்காமல் கிடைக்கும் வேலையில் சேர்ந்து விட்டு பின்னர் தங்களுக்கான பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் டாக்டர் சி.உதயகுமார்  ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். பின்னர் விழாவில் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து 153 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் பட்டங்கள் வழங்கப்பட்டது. பட்டதாரிகளை அவர்களின் சிறப்புத் துறையில் “தொழில்நுட்பம் மற்றும் தரம்” மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள அனைவரும் ஊக்குவித்தனர். இந்த விழாவில் கல்லூரியின் தலைவர் ஆர். சூரிய நாராயணன் ,மேனேஜிங் டிரஸ்டி ஜி.சீனிவாசன், டிரஸ்டி டி.ராஜா செயலாளர் டாக்டர்.ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.