கோவை கணபதியில்  கூலி தொழிலாளி அடித்து கொலை 

கோவை,கோவை கணபதி ராஜ வீதியைச் சேர்ந்தவர் கந்தசாமி என்பவர் மகன் வெங்கட் என்கிற வெங்கடேஷ் (53). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஹரிஷ்(14) என்ற மகன் உள்ளனர். வெங்கடேஷ் கூலி வேலை செய்து வந்தார். கூலி வேலை செய்து வரும் வெங்கடேஷ் தினமும் மது குடித்துவிட்டு ரோட்டில் அங்குமிங்கும் அலைந்து அனைவரிடமும் தகராறு செய்து வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு மது அருந்திவிட்டு ரோட்டில் அலைந்து கொண்டிருந்த வெங்கடேஷ் இன்று காலை கணபதி சங்கனூர் சாலையில் புதியதாக திறக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் வளாகத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சரவணம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர் விசாரணையில் வெங்கடேஷை பலமாக தாக்கி அடித்துக் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தடவியல் நிபுணர்கள் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.