குனியமுத்தூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் சி.ஐ.டி அகாடமி எனப்படும் தகவல் தொழில் நுட்ப மையம் நடத்தும் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாட்டின், இளைஞர்களின் தொடர் சொற்பொழிவு போட்டிகளின் இறுதி சுற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கனிமொழி எம்பி மாணவர்கள் மத்தியில் பேசும்போது

சத்துணவு திட்டத்தை முதலில் தொடங்கிய மாநிலம் தமிழ்நாடு. காலை உணவு திட்டத்தை இந்திய அளவில் துவங்கி வைத்துள்ளது தமிழ் நாடு.
இந்திய அளவில் ஐ டி சி பாலிசியை உருவாக்கியவர் கலைஞர்.
மிகச்சிறந்த தலைவர்கள் மக்களை படிக்கக்கூடியவர்கள்.
கம்யூனிகேசன் என்பது வளர்ந்து வருகிறது.மாறி கொண்டே வருகிறது.

அரசியலில் தவறுகள் நடைபெறும் போது தொழில் நுட்பத்தால் வைரல் ஆகிறது.
இது இளைஞர், இளம் பெண்களின் உலகமாக உள்ளது.
தந்தை பெரியார்,அண்ணா ஆகியோரை இணைத்து கருத்துகளை தெரிவிக்கும் தலைவராக கலைஞர் இருந்துள்ளார்.
தமிழ் நாட்டில் இன்று அறிவியல் பூர்வமாக நல்ல கம்யூனிகேஷன் தொடர்பு உள்ளதிற்கு காரணம் மேலே குறிப்பிட்ட 3 தலைவர்கள்.

பெண்கள் போலியான பாதுகாப்பில் இருந்து வெளியே வர வேண்டும்.
நாம் கம்யூனிகேஷனில்
எந்த இடத்தில் இருக்கோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் உணர்வு அனைவருக்கும் உள்ளது.மெரினாவில் இளைஞர்கள் போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றீர்கள்.
மொழி ,அடையாளம் ஆகியவை பெருமையாக இருக்கிறது என தெரிவித்தார்.